"சென்னையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்?" - உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி அறிக்கை

 
"சென்னையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்?" -உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி அறிக்கை

மதுபானம் கலக்கப்படவில்லை என சென்னை ஐஸ்கிரீம் சர்ச்சை குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்த பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தங்களது இறுதி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.  அந்த அறிக்கையின்படி, சர்ச்சைக்குள்ளான ஐஸ்கிரீமில் எந்தவொரு மதுபானப் பொருட்களும் கலக்கப்படவில்லை என்பது ஆய்வின் மூலம் முற்றிலும் உறுதியாகியுள்ளது. கடையைப் பிரபலப்படுத்துவதற்காக யூடியூப் ரிவ்யூவுக்கு அழைத்த கடை உரிமையாளர் மீதும், உண்மைக்குப் புறம்பாக 'மதுபான ஐஸ்கிரீம்' எனத் தவறான தகவல்களைக் கொடுத்து வீடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் நிஷா நிவேதா மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் மதுபானம் பெயரில் ஐஸ்கிரீம் விற்பனை எனக்கூறி இன்புளுயன்சர்கள் பதிவிட்ட அனைத்து வீடியோக்களும் நீக்கினர். உண்மைத்தன்மை அறியாமல் ரிவ்யூ செய்ய வேண்டாம் என நேற்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து உடனடியாக அனைத்து வீடியோக்களையும் சம்பந்தப்பட்ட இன்புளுயன்சர்கள் நீக்கியுள்ளனர்.