உலக கோப்பை - இன்றைய போட்டியில் இந்தியா-நெதர்லாந்து மோதல்!

 
IND

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்  இன்று நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இதேபோல் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. 

NED

இந்த நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. தொடர் வெற்றிகளை மட்டுமே கண்டுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு கம்பீரமாக செல்ல முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், தொடரில் இருந்து வெளியேறியுள்ள நெதர்லாந்து அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்ய தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.