தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
Jun 10, 2026, 07:00 IST1781055029000
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாக வசதிகளுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி, பல்வேறு துறைகளை சேர்ந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தஸைமைச் செயலர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம்:
| அதிகாரியின் பெயர் | வகித்து வந்த பதவி | புதிய பதவி |
| சுன்சோனுகம் ஜடக் செரு | பொதுப்பணிகள் துறை முதன்மைச்் செயலர் | நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் |
| ஆர்.செல்வராஜ் | நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் | பொதுப்பணிகள் துறை முதன்மைச்் செயலர் |
| சந்தீப் நந்தூரி | தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் | இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் |
| பி.உமா மகேஸ்வரி | மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் | கைத்தறி துறை இயக்குநர் |
| எம்.பிரதீப் குமார் | நகராட்சி நிர்வாகத துறை இயக்குநர் | பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் |
| ஆர். அழகுமீனா | சுகாதாரத் துறை துணை செயலர் | மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் |
| ஆர். சுரேஷ் குமார் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் | தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழிலக வாரியத்தின் தலைமை செயஸ் அதிகாரி |
| சித்ரா விஜயன் | சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் | சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) |

