ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் அமுதா
Updated: May 14, 2026, 19:11 IST1778766090875
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்
உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்
டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்
சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்
மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்
சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்
கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம்
தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம்

