முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு துவக்கம்..!!

 
vijay

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு துவங்கியது.

இன்றும், நாளையும் மாநாடு நடக்கிறது. மொத்தம் 3 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டின் முதல் அமர்வில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்துகின்றனர்.

சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் இல்லாத தமிழகம், திட்டங்களின் நிலை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கிறது.

இறுதிநாளில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவது, சட்டம் -ஒழுங்கு பராமரிப்பு குறித்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது.