“தவெகவினர் உட்பட யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள்”- காவல்துறைக்கு விஜய் அதிரடி உத்தரவு

 
ச்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில்  மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 28 துறைகளில் செயல் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுமக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்று இனி நடைபெறாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தவெகவினர் உட்பட அரசியல் தலையீடின்றி காவல் துறை செயல்பட அனுமதி. அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதிகாரிகளுக்கு பணிகளை செய்ய முழு சுதந்திரம் கொடுக்கிறேன். ” என ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.