"100 கோடி கொடுத்தாலும் இதை மட்டும் பண்ணவே மாட்டேன்" - ஐஸ்வர்யா லட்சுமி
என்னோட புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாகவும் தரகுறைவாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பினாங்க; அது என்னை ரொம்ப பாதித்தது என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக பகிரப்பட்டதும், தரக்குறைவான கருத்துகள் பதிவானதும் என்னை கடுமையாக பாதித்தது. ஒரு கட்டத்தில் உலகமே எனக்கு எதிராக இருப்பது போல உணர்ந்தேன். மேலும் கடந்த ஆண்டு அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகினேன்.யாராவது எனக்கு ரூ.100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன். ஆன்லைனில் பழகுவதை விட மக்களை நேரில் சந்தித்து பேசுவதையே விரும்புகிறேன். எல்லா சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகிய பிறகு தான் எனக்கு உண்மையான மன அமைதி கிடைத்தது. சினிமாவில் வாய்ப்புகளுக்காக தனது கொள்கைகளையோ, முடிவுகளையோ மாற்றிக் கொள்ள மாட்டேன். எவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டாலும், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதே எனது முன்னுரிமை. மனநிறைவு தரும் படைப்புகளில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

