"உயிரோடு இருக்கும் வரை ஓட்டு போடுவேன்!" – தாராபுரம் இடைத்தேர்தலில் வீல்சேரில் வந்து கம்பீரம் காட்டிய மூதாட்டி!

 
1

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில்,மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மேலவளம்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், 85 வயதான மூதாட்டி ஒருவர் வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தார். வயது முதிர்வு காரணமாக நடப்பதற்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், கம்பை ஊன்றியபடி வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். பின்னர், தேர்தல் பணியாளர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

85 வயதிலும் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல் நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் வந்து ஒரு மூதாட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது நிகழ்ந்துள்ளது.


அப்போது அந்த மூதாட்டி, "நான் உயிரோடு இருக்கும்போது ஓட்டு போட்டு தானே ஆகணும்" என்று கம்பீரமாகக் கூறி அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளார்.