#BREAKING நாளை மதியம் 12 மணிக்கு மனம் திறந்து உரையாடுகிறேன்- அண்ணாமலை
நாளை மதியம் 12 மணிக்கு, சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, மனம் விட்டு உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தனது IPS பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ல் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவராக 2021, ஜூலையில் நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோவிடம் தோல்வியடைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். 2025, ஏப்ரலில் அண்ணாமலையின் மாநில பாஜக தலைவர் பொறுப்பு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து 2026, ஜூன் 2ல் பாஜகவில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபியை சந்தித்து, தன் பக்கம் இருக்கும் விளக்கத்தையும் கொடுத்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்நிலையில் நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

