"2026ல் நான் யார் என்று காட்டுவேன்" - சசிகலா சபதம்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட திமுக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் கூட்டணி ஒப்பந்தம் நிறைவு பெற்று, தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படி அதிமுகவில் இயங்கி வந்த முக்கிய புள்ளிகள் தற்போது பிரிந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா , 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்னவாகும் என்பதை கணித்துள்ளேன். மூன்று அணிகளாக உள்ள அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்புள்ளது . 2026 ஆம் தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி இருக்கும். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அதிமுகவில் நடப்பது பங்காளி சண்டை. மூன்றாக இருக்கும் அனைவரும் ஒரே அணியில் இணைவர் என்றார்.