“விஜய் படம் இருக்கும் இடத்தில் பணியாற்ற மாட்டேன்”- அடம் பிடிக்கும் மேயர்

 
s

நெல்லை மேயர் அலுவலகத்தில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் இல்லாதது பற்றி த.வெ.கவினர் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது அங்கு முதல்வரின் படம் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. 

Image

நெல்லை மேயர் அலுவலத்தில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் இல்லாதது பற்றி த.வெ.கவினர் கேள்வி எழுப்பினர். தவெகவினரின் தொடர் போராட்டத்தால் நெல்லை மேயரின் இருக்கைக்கு மேல் முதலமைச்சர் விஜய் படம் மாட்டப்பட்டது. முதலமைச்சர் விஜய் படம் மாட்டப்பட்டதால் அதிருப்தியடைந்த திமுக மேயர் ராமகிருஷ்ணன், தனது இருக்கையில் அமராமல் அலுவலகத்தில் ஷோபாவில் அமர்ந்து தன் பணியை செய்து வருகிறார். "இங்கு அமர்ந்து பணிபுரிவதுதான் பிடித்திருக்கிறது" என மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image

கடந்த மாதம் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் வந்து, தவெக MLA முன்னிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மாமன்ற கூட்டம் நடத்தினார். இதே செயலை எதிர்க்கட்சியினர் அவர்களது ஆட்சிக் காலத்தில் செய்திருந்தால், உடனே அதிகார துஷ்பிரயோகம், அரசியல் பழிவாங்கல், ஒழுங்கு நடவடிக்கை என பெரிய சர்ச்சை உருவாக்கியிருப்பார்கள் என தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.