''அரசியலுக்கு வரமாட்டேன்''- நடிகர் சூர்யா

 
surya

 

வழிதெரியாமல் கூட அரசியல் பக்கம் போக மாட்டேன் என நடிகர் சூர்யா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நடிகர் சூர்யா பேசுகையில், "நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை. நான் மௌனமாக, உன்னிப்பாக அரசியலை கவனித்து வருகிறேன். இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்துகொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது. முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம். வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன். என் மனதுக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். எனக்கு அடையாளம் கொடுத்தவர்களுக்கு எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அவற்றையெல்லாம் திருப்பி கொடுக்க நினைக்கிறேன். நாங்கள் செய்யும் வேலைகளை சேவை என்று சொல்ல மாட்டேன். அது எங்களுடைய  பொறுப்பு. இதில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. 

சமூகத்தின் பிரச்னை ஊழல் என்றுதான் சொல்கிறோம். எல்லாக் கெட்ட விஷயங்களுக்குமே மூலக் காரணம் அறியாமைதான்.  கல்வி என்ற வெளிச்சம் மட்டுமே அந்த அறியாமை இருளைப் போக்கும்.  ஊழலை மூன்றாவது நபர் வந்து ஒழிக்கப் போவதில்லை. ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்குள் அந்த போராட்டத்தை நிகழ்த்தி பார்க்க வேண்டும்" என்றார்.