என்னை கொன்று போட்டாலும் சரி, டிசம்பரில் வங்கதேசம் செல்வேன் : ஷேக் ஹசீனா..!!
வரும் டிசம்பர் மாதம் தாய்நாடான வங்கதேசத்திற்கு நிச்சயம் திரும்புவேன்,' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கடும் மக்கள் மற்றும் மாணவர் போராட்டங்களை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். தற்போது அந்நாட்டில் இடைக்கால ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், வாஷிங்டனில் 'அமெரிக்கா-வங்கதேச உறவுகள் மையம்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக ஷேக் ஹசீனா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு திரும்ப உள்ளேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதைக் கண்டு அஞ்சப் போவதில்லை. அங்குள்ள அரசு என்னை கைது செய்யலாம், கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கலாம். என்னை கொலை செய்யக்கூட துணியலாம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், தாய்நாட்டுக்குத் திரும்புவது எனது தலையாய கடமை.
என் மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய நான் அங்கு சென்றே தீருவேன்.
இவ்வாறு தெரிவித்தார்.

