போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை- சவுக்கு சங்கர் வாக்குமூலம்

 
சவுக்கு

போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் அஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 

தேனி  "ரிவேரா" தனியார் தங்கும் விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா 409 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அவரது உதவியாளர்கள் உள்பட மூவர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்ற அனுமதியுடன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு சவுக்கு சங்கர் திங்கட்கிழமை அழைத்து வரப்பட்டார். இரண்டு நாட்களாக 
தேனிமாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சுகுமார், விவேகானந்தன், வழக்கு விசாரணை அதிகாரியான தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் அடங்கிய குழுவினர் யூடியூபர்  சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு மணி நேரம் வரை உடல் மருத்துவ பரிசோதனை நடைபெற்று முடிவடைந்ததையடுத்து அங்கிருந்து காவல்துறை வாகனத்தில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

துப்பாக்கி ஏந்திய ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட உள்ளார். அப்போது போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்துள்ளனர்.