பெற்ற தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் -குஷ்பு குமுறல்

 
kh

நானும் பெற்ற தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார் குஷ்பு.

 ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு எண்பதுகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார் குஷ்பூ. 90களிலும் இவரது ராஜ்ஜியம்தான். குஷ்பு இட்லி என்று சாப்பாடு பொருளுக்கும்,  வெண்ணெய்க்கும் இவரது பெயர் வைக்கும் அளவுக்கு புகழ்பெற்றார்.   தற்போதும் சினிமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார் . 

சமூக ஈடுபாடு,  அரசியலிலும் தீவிரமாக பயணித்து வருகிறார்.  திமுக , காங்கிரஸில் தீவிரமாக இயங்கி வந்த குஷ்பு பாஜகவில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர்,  தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்று தீவிரமாக இயங்கி வருகிறார்.

k

 இவர் பத்திரிக்கையாளர் பர்க்கா தத்  உடனான பெண் மைய உரையாடலில் பங்கேற்று பேசியுள்ளார் .  இதில் தனது சிறுவயது  துயரத்தை மீடூவாக வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீடூ மூலம் பிரபல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துயரத்தை பகிர்ந்து வந்த நிலையில் தற்போது குஷ்பூ அதில் இணைந்திருக்கிறார்.

 அவர்,   ஆணோ பெண்ணோ குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.   பின்னர் வாழ்க்கை முழுவதும் அந்த பாதிப்பு இருக்கும்.  எட்டு வயது சிறுமியாக இருந்தபோது நானும் பெற்ற தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்.   மனைவியை அடிப்பதும் ஒரே மகளிடம் தவறாக நடந்து கொள்வதும் பிறப்புரிமை என்று எனது தந்தை இருந்தார்.  

 எனக்கு நேர்ந்த துயரத்திற்கு எதிராக போராடும் துணிச்சல் அப்போது இல்லை .  பதினைந்து வயதில் தான் அந்த துணிச்சல் எல்லாம் வந்தது.  என் தந்தை பொறுப்பில்லாத தந்தையாக இருந்தார்.   எனது 16 வயதில் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 குஷ்புவின் சகோதரர்களின் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார்.  இதை வேதனையுடன் குஷ்பூ தெரிவித்திருந்தார் .  இந்த நிலையில் பெற்று தந்தையே தன்னிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து தனக்கு அளித்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் குஷ்பு.