என்னையும் சென்சார் போர்டு வச்சு செஞ்சாங்க! - 'தலைவர் தம்பி தலைமையில்' விழாவில் நடிகர் ஜீவா பேச்சு..!

 
1 1

ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, 'தலைவர் தம்பி தலைமையில்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

இதில், நாயகியாக பிரார்தனாவும், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 15-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ஜீவா , சென்சார் விவகாரம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ’நான் தான் சென்சாரின் பிராண்ட் அம்பாசிடர். நான் நடித்த ஜிப்சி படத்தில் 48 கட் இருந்தது. என்னை தான் சென்சார் வைத்து செய்தார்கள். எல்லாம் முடிந்து படம் வெளிவரும்போது, கொரோனாவில் மாட்டிக்கிட்டோம்’ என்றார்.