டெல்டா தொகுதியில் போட்டியிடவே எனக்கு விருப்பம் : டிடிவி தினகரன்..!

 
1

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அ.ம.மு.க. போட்டியிடும் இரண்டு தொகுதிகள் எவை என்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பதை பா.ஜ.க. தலைமை தான் அறிவிக்கும். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் திராவிடர்கள் தான். திராவிட கட்சிகளை எதிர்ப்பதாக பா.ஜ.க. கூறுவது ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தான். டெல்டா தொகுதியில் போட்டியிடவே எனக்கு விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.