“எனக்கு நீதி வேண்டும்” - டிடிஎஃப் வாசன்

 
tt

பிரபல யூடியூபர்  டிடிஎஃப் வாசன்  மதுரை அண்ணாநகர் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.  கார் ஓட்டுவதற்கு எல் எல் ஆர் விண்ணப்பித்த டிடிஎஃப் வாசன் செல்போனில் பேசியபடி காரை கவனக்குறைவாக ஓட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் டிடிஎஃப் வாசனை இருசக்கர வாகன உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ggg

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசன் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது,  பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

ttf

இந்நிலையில் மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற வழியில் செய்தியாளர்களை சந்தித்த  டிடிஎஃப் வாசன்,   “என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா?;வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா?; என் மீது 308 கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது;  எனக்கு நீதி வேண்டும்” என்று கூறினார்.