சூரியனுக்கு ஓட்டு போடணும்னு சொன்னேன்... விசிலுக்கு அமுத்தச் சொன்னாங்க - மூதாட்டி பரபரப்பு புகார்..!

 
1

தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவர், வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் தன்னை விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

“நான் சூரியன் சின்னத்திற்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், விசில் சின்னத்துக்கு பட்டனை அழுத்துமாறு கூறினார்கள்” என்று அந்த மூதாட்டி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தப் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை கண்டித்து அதிமுக, திமுக முகவர்கள் இணைந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புகாருக்குள்ளான வாக்குச்சாவடி நிலை அலுவலரை உடனடியாக பணியில் இருந்து மாற்றம் செய்து மற்றொரு அதிகாரியை தேர்தல் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.