எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி - பிரதமர் மோடி..!

 
Q

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது 75-வது பிறந்தநாளுக்கு தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி. நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.