கொடுத்தது 525 வாக்குறுதிகள்... நிறைவேற்றியது பத்து சதவீதம் கூட இல்லை : ஆர்பி உதயகுமார்..!

 
1 1

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெங்கபாளையம் கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அன்னதானத் திருவிழா நடைபெற்றது. இந்த அன்னதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். 10% கூட நிறைவேற்றவில்லை. நாங்களும் கேள்வி கேட்கிறோம். அவர் நாங்கள் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று பச்சை பொய்யை சொல்கிறார். 90% நிறைவேற்றி விட்டேன். நாங்கள் கேட்கிறோம். 100 நாள் வேலையை 150 நாள் உயர்த்துவேன் என்று சொன்னீர்கள். ஊதியத்தை உயர்த்துகிறேன் என்று சொன்னீர்கள். ஸ்டாலின் அண்ணாச்சி 100 நாள் வேலை கூட முழுமையாக கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்தை பாதிக்கிற வகையில் இந்த அரசு இருக்கிறது என்று சொன்னால் அதுதான் எதார்த்தமான நிலைமை. அதை அவர் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. அவர் அரசர் போலவும். நாம் ஆண்டிகள் போலவும், அடிமைகள் போலவும் தான் முதலமைச்சர் மக்களையும் எதிர்க்கட்சிகளையும் பொதுமக்களையும் நடத்துகிறார் என்பது எதார்த்தமான உண்மை.

நேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலமாக காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். வருகிற மக்கள் இடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். உங்களுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவளியுங்கள். உடல்நிலை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று, காலம் கடந்து காவல்துறை கனிவு காட்ட வேண்டிய காரணம் என்ன? கண் கட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் கிராமத்தில் சொல்வார்களே. அதே போல விசாரணை அழைத்து சென்ற 25 பரலோகம் அனுப்பிவிட்டு இப்போது வந்து அவர் வந்து கருணை காட்டுவது என்று சொன்னால் யாரை பாதுகாப்பது. என்ன ஏமாற்று வேலை.

காவல்துறைக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருந்தால் இங்கிலாந்து ஸ்காட்லாந்து யார்ட் நிகரான காவல்துறை நம்முடைய தமிழ்நாட்டு காவல்துறை இருந்திருக்கும். முதலமைச்சர் பதவி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க முடியாது. கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் தான் வருவார்கள். ஏனென்றால் கருணாநிதி குடும்பத்திலிருந்து முதலமைச்சர் பதவியை கருணாநிதி, ஸ்டாலின் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி, மொத்த நிதியும் உங்களிடம் தான் உள்ளது .மத்த ஏழை பாழைகள் என்ன செய்வது. நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. வாய்கிழிய பேசுகிறார். வாய்ச்சொல் வீராசாமி ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தாரா? 2000 அம்மா கிளினிக்கை மூடியதுதான் மிச்சம். இவ்வாறு அவர் கூறினார்.