"எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது!" – தேவா மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட கண்ணீர் மல்கும் கவிதை!

 
1

தனது பாடல்கள் ஒலிக்காத ஊர்களோ, தெருக்களோ இல்லாத அளவிற்கு பட்டிதொட்டியெங்கும் தனது பாடல்களால் ஆட்டம் போட வைத்தவர் இசையமைப்பாளர் தேவா. இவர் 'பாட்ஷா' படத்தில் வழங்கிய 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஆட்டோ ஓட்டுநர்களின் அறிவிக்கப்படாத தேசிய கீதமாகவே இன்றும் இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களின் சிறப்பை எடுத்துக் கூறும் வரிகளுடன் துள்ளல் இசையில் அந்தப் பாடலை கொடுத்திருப்பார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

சாவாப் பாடல்கள் தந்த
தேவா மறைந்துவிட்டார்

தேனிசைத் தென்றல்
நின்று போயிற்றா?

நெஞ்சு கனக்கிறது

தன் பேச்சு மூச்சு
அனைத்திலும்
இசையாகவே இருந்தவர்

சங்கீதத்தோடு
இங்கிதம் தெரிந்தவர்

பண்ணிசைக்கத் தெரிந்த
பண்பாளர்

அவரோடு நான் பணியாற்றிய
அண்ணாமலை, பாட்ஷா
அருணாசலம், வாலி, குஷி, 
நேருக்கு நேர், ஆசை, 
பஞ்ச தந்திரம் முதலிய
நூற்றக்கணக்கான படங்களின்
பாட்டு வெற்றிக்கு
தேவாவே காரணம்

தேவாவின் இசையைப்போல்
ரஜினிக்கு வேறு யாரும்
பொருந்தவில்லை என்றுதான்
ரசிகர்கள் பேசுவார்கள்

என்ன சொல்வது?

எனக்கு என் விரல்களில்
ஒன்று போய்விட்டது

அவரை இழந்துவாடும்
குடும்பத்தார்க்கும்
ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்

கவலைப்படாதே சகோதரா
என்று பாடியவனே!
இன்றுநான் கவலைப்படாமல்
என்ன செய்ய?