மந்திரம் வச்சிருக்கேன்..! யாராவது கிளம்பினீங்கனா ரத்தம் கக்கி சாவீங்க : செல்லூர் ராஜூ..!

 
1
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 தொதிகளில் போட்டியிடும் அதிமுக மொத்தமாக 35 வேட்பாளர்களை இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகிறது. மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மதுரையில் வாக்கு சேகரித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்நிலையில் இன்று கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேச ஆரம்பித்தவுடன் கூட்டத்தில் இருந்து சிலர் எழுந்து சென்றனர். அவர்களை அமருமாறு மேடையில் இருந்து நிர்வாகி அறிவுறுத்தினார்.

அதிமுக நிர்வாகி அறிவுறுத்தியும் கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் கலைந்து சென்றதை அடுத்து, மேடையில் வந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. நான் பேசும்போது கூட்டத்தில் இருந்து இடையில் யாரும் பேசக்கூடாது. நடுவுல எழுந்தும் போகக்கூடாது. போன வீடு போய்ச் சேர்வதற்குள் ரத்தம் கக்கி சாவீங்க. 5 நிமிடம் டைம் தருகிறேந். அப்போது எழுந்து போலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டு தான் கூட்டத்திற்கு வந்தேன் என கலகலப்பாகப் பேசினார்.

செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் முதலில் பயந்தாலும், பின்னர் நகைச்சுவையை உணர்ந்து சிரித்தனர். வேட்பாளர் சரவணனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பொதுக் கூட்டங்களிலும் சரி, பத்திரிகையாளர் சந்திபிலும் சரி, ஜாலியாக கமெண்ட் அடித்து பேசுவது செல்லூர் ராஜூவின் வழக்கம்.