இந்த அவசரம் ஏன் என்று எனக்கு புரியவில்லை - பா.ஜ.க. எம்.எல்.ஏ. போஜராஜன்..!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடுகாண தனி தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார். அப்போது, தற்போதுள்ள மக்களவை எண்ணிக்கையான 543 என்ற அளவினை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், மாநிலங்களவை உறுப்பினர்களின் விதாச்சார பிரதிநிதித்துவம் தற்பொழுது இருக்கும் அளவிலேயே நிரந்தரமாக வேண்டும் என்றும் தெரிவித்ததோடு, இந்த தீர்மானம் ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் அல்ல; தமிழ்நாட்டின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்கும் தீர்மானம். ஆகவே அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பேரவை உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொகுதி மறுவரையரை தொடர்பான முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை எதிர்த்து பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. போஜராஜன், புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டதை களங்கப்படுத்த வேண்டாம். அவசர அவசரமாக தீர்மானம் கொண்டு வருவதை பாஜக ஏற்கவில்லை. அடிக்கடி நாளுமன்ற கட்டிடத்தை இடித்துக் கட்டமுடியாது என்பதால்தான் அதிக இருக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது என்றார்.
தொகுதி மறுவரையறை பரிசீலனையில்தான் இருக்கிறது. மாற்றம் நல்லதுதான். மாற்றம் வந்ததால்தான் நீங்களெல்லாம் அமைச்சராக வந்தீர்கள். நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகள் வைத்து கட்டியதையெல்லாம் விமர்சனமாக முன்வைக்கிறார்கள். அதிலெல்லாம் எந்த உள்நோக்கமும் இல்லை. வருங்கால சந்ததியை மனதில் வைத்து கட்டப்பட்டது அது
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; இவ்வளவு அவசர பட்டு கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கிறோம்.

