"செந்தில்பாலாஜியை போல் ஊழல் செய்ய தெரியாது!ஊழலில் பறிபோன அனைத்து பணத்தையும் தமிழக கஜானாவுக்கு கொண்டு வருவேன்"- அமைச்சர் விக்னேஷ்

 
s

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலித்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். ஜூன் மாத இறுதிக்குள் முற்றிலுமாக தடுக்கப்படும். விதியை மீறி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால், சம்பந்தபட்ட ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் கட்டாயம் சஸ்பென்ட் செய்யப்படுவர். சட்டமன்ற கூட்டத்தொடருக்குள் டாஸ்மாக்கில் MRP-ஐ விட ரூ.10 வசூல் நிறுத்தப்பட்டது.ஊழலில் பறிபோன அனைத்து பணத்தையும் தமிழக கஜானாவுக்கு கொண்டு வருவேன்.

த.வெ.க ஊழலும் பண்ணாது, ஊழல் பண்றவங்களையும் விடாது.. சும்மா சிரிச்சிட்டு என்ன வேணாலும் பேசிட்டு போய்டலாம்னு நினைக்கிறாங்க, விட மாட்டேன் யாரையும்.. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. செந்தில்பாலாஜியை போல் எனக்கு ஊழல் செய்ய தெரியாது. செந்தில் பாலாஜி மாதிரி செயல்பட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நாங்கள் மூடிய 717 கடைகள் சாதாரண வருமானம் வரும் கடைகள் அல்ல.. கிட்டத்தட்ட ஒரு நாள் வருமானம் 25 லட்சம் ரூபாய் வரை வரும் கடைகள்.. இந்த நடவடிக்கை தொடரும்.. இந்த 5 ஆண்டு முடிவில் இந்த துறை எப்படி இருக்கப்போகுதுனு பாருங்கள்.. சேலஞ்சா சொல்கிறேன். டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயம் ஆக்கும் நோக்கம் எதுவும் தவெக அரசுக்கு இல்லை. ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும்.” என்றார்.