முடிவு எப்படி வரும் என்று தெரியவில்லை: மு.க.அழகிரி..!
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும்ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை டி.வி.எஸ். நகர் வாக்குச் சாவடிக்கு இன்று காலை தனது மனைவியுடன் வந்த மு.க. அழகிரி வாக்களித்தார்.
பின் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கிறது; வெயிலும் அதிகமாக இருக்கிறது; முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை; ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன், யார் வேண்டுமானாலும், எப்படி வேணாலும் ஜெயிக்கலாம். என்று” எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மு.க.அழகிரி#Madurai | #MKAlagiri | #Voting | #TNAssemblyElection2026 | #TNElection2026 | #PolimerNews pic.twitter.com/rt4Kt4xhBL
— Polimer News (@polimernews) April 23, 2026

