ரூ.2000 நோட்டு வாபஸால் திமுகவுக்கு தான் பாதிப்பு - அண்ணாமலை

 
annamalai

என்னிடம் ₹2,000 நோட்டு இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது.  மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 20 ஆயிரம் வரை ரூபாய் 2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

annamalai mkstalin

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  "என்னிடம் 2000 ரூபாய் நோட்டு இல்லை. 2000 நோட்டுக்களை வாபஸ் பெற்றது பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை. மூன்று வருடங்களாக 2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டு வாபஸால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.