"மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் உடன்பாடில்லை" - அமைச்சர் உதயநிதி

 
udhayanidhi

திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி. சேலத்தில் வரும் 21 ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம்  தொடங்கியது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

udhayanidhi

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். நீட் தேர்வை விலக்க கோரி 85 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம். ராமர் கோவில் திறப்பு, மத நம்பிக்கை ஆகியவற்றில் திமுகவுக்கு எதிர்ப்பு இல்லை.மசூதியை இடித்து கோயில் கட்டியதால் அதற்கு திமுக உடன்படவில்லை என்றார்.