"சீமானிடம் பேசினேன்...என் தோல்வியை ஒத்து கொள்கிறேன்" - விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி!!

 
tn

சீமான் மீதான புகாரை திரும்ப பெற்ற நிலையில் தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்

சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றுள்ள நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் , "காவல்துறையில் புகார் அளித்த பிறகு நான் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் தங்கி வந்தேன்.  வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது.   ஆனாலும் கடந்த சில நாட்களாக அவர் ஒரு ரூட்டில் செல்கிறார்,  என்னையும் வேறு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார்.  எதுவாக இருந்தாலும் என்னை கேட்டுவிட்டு பேசும்படி கூறியிருந்தேன்.

seeman vijayalakshmi

வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தங்கி இருந்த நிலையில் நேற்று இரவு என்னை அங்கிருந்து வெளியே செல்லும்படி சொன்னார்கள்.  இரவு நேரம் என்பதால் அங்கு இருக்க போலீஸ் தான் பேசினார்கள். நகரில் இருந்து வெளியே தங்கி இருந்தேன். காலையில் உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ்தான் வாங்கிக் கொடுத்தார்கள் .இப்படி வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்களை நான் எதிர் கொண்டேன்.

seeman

 இதன் காரணமாகவே நான் புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன். நான் இப்போது பெங்களூரில் கிளம்புகிறேன். வழக்கை வாபஸ் பெற நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை,  என்னை  யாரும் கட்டாயப்படுத்தவில்லை.  புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.  சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவும் கிடைக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானிடமும் கூட இது குறித்து நான் பேசி விட்டேன். சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது; அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒத்துக்கொண்டு செல்கிறேன் சீமானின் குரல்தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது; அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். தற்போது புகாரை வாபஸ் பெற்றுள்ளேன். மீண்டும் இந்த புகாரை முன்னெடுக்க விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.