``திமுகவை பழிவாங்க இதை செய்தேன்’’- அமெரிக்க மென்பொறியாளர் பரபரப்பு
அமெரிக்காவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக 1,500-க்கும் மேற்பட்ட இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சரத் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

2 ஆண்டுகளாக 1,500க்கும் மேற்பட்ட இ-மெயில் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தை சேர்ந்த அமெரிக்க மென்பொறியாளர் சரத் என்பவரை போலீஸ் கைது செய்தது. கடந்த ஆட்சியில் அரசு தேர்வு எழுதி தமிழ்நாட்டில் வேலை கிடைக்காததால், திமுகவை பழிவாங்க அதன் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் தேர்வு எழுதியும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்காதபோது, தனக்கு தெரிந்த பேராசிரியை ஒருவர் பணம் கொடுத்து அங்கு வேலை வாங்கியதால் ஆத்திரம் அடைந்ததாகவு, அந்த பல்கலை.க்கு மட்டுமே 50க்கும் மேற்பட்ட முறை மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் சரத் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி நாடுமுழுவதும் அரசியல்வாதிகளின் வீடுகள், கல்வி நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததை சரத் ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக SV சேகர் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசியதால், அவர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். Outlook மூலம் மெயில் அனுப்பியவர், ஒருமுறை சொந்த நம்பரை வைத்து அனுப்பியபோது சிக்கினார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தபோது ஏர்போர்ட்டில் அவரை போலீசார் கைது செய்தனர்.

