"அடக்க முடியாத சிரிப்பு வருது.." - இபிஸ்-ஸின் 'இரவல் ஆட்சி' விமர்சனத்தை கிண்டல் செய்த தவெக ஐடி விங்!
சேலத்தில் பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக - அதிமுக கூட்டுக்களவாணிகள் அல்ல, அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கட்சியில் சேர்த்து கொண்ட முதலமைச்சர் விஜய்தான் களவாணி என்றும், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என முதலமைச்சர் விஜய் பேசுகிறார், திமுக- அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சித்தது என்பது கட்டுக்கதை என்றும் விஜய்யையும், தவெக ஆட்சியையும் மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில் தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கட்சி நடக்கிறதா? கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.
”தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி.
கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்.” என்று த.வெ.க. ஐடி விங் கிண்டல் அடித்துள்ளது.
கட்சி நடக்கிறதா?.கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 14, 2026
திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
கொடநாடு…