இம்மானுவேல் சேகரனாரின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் - ஈபிஎஸ்
தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சமூக தீமையான தீண்டாமையை அழிக்க பாடுபட்டவரும், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி திரு.#இம்மானுவேல்_சேகரனார் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடிய அவரது தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சமூக தீமையான தீண்டாமையை அழிக்க பாடுபட்டவரும்,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 11, 2023
அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி திரு.#இம்மானுவேல்_சேகரனார் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடிய அவரது தியாகத்தை இந்நாளில் போற்றி… pic.twitter.com/uO0XDwkQKs
முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.