அதிமுகவில் இருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மனவேதனையுடனும் விடைபெறுகிறேன் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!
சட்டமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்த பின், தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல; இரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சோதனைக சந்தித்த அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றவன் நான்.
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அடக்குமுறையால் என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. அதிமுகவினர் மற்றும் என் குடும்பத்தினர்கள் மீதும் 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது.
அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும். கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணைநின்ற அதிமுக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும்.
இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாரிசுகளான நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? ஜெயலலிதாவால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன் எப்படி அண்ணா திமுக கைகோர்க்க முடியும்?
எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவருடைய தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, அவர் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது.
அவருடைய இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாவதற்கு எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை.
அதிமுகவுக்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். கரூர் தொகுதி மக்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 சட்டமன்ற உறுப்பினர்கள், சமாதானப் படுத்தப்பட்டு அவர்களுக்கு கட்சியில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதும், கட்சியில் இருந்து விலகுவதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, மேலும் சில அதிருப்தி எம்எல்ஏக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.