ஆருத்ரா குழந்தைக்கு நான் இருக்கேன். பேனரை கையில் வாங்கி CM விஜய்..!

 
1

கோவையில் நடைபெற்ற சாலை வலத்தின்போது, சிறுமி ஆருத்ராவுக்கு உதவி கோரி அவரது பெற்றோர் பதாகை ஏந்தி நின்றனர். இதைப் பார்த்த முதலமைச்சர் விஜய், அவர்களிடமிருந்து பதாகையைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், பதாகையின் பின்புறத்தில் எழுதப்பட்டிருந்த பெற்றோரின் செல்போன் எண்ணையும் பெற்றுக்கொண்டு, சிறுமிக்கு உதவுவதாக சைகை மூலம் உறுதியளித்தார். சிறுமியின் பெற்றோரின் கோரிக்கையைக் கவனித்து அவர் உறுதியளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

சிறுமி ஆருத்ராவுக்கு தண்டுவட தசை நலிவு நோய் (Spinal Muscular Atrophy - SMA Type 1) என்ற அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இக்குழந்தையைக் குணப்படுத்த மரபணு சிகிச்சைக்காக (Gene Therapy) சுமார் ₹16 கோடி மதிப்பிலான உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்து தேவைப்படுகிறது.

இக்குழந்தையின் மருத்துவச் செலவிற்கான நிதி உதவி கோரி, கோவையில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்வின் போது அவரது பெற்றோர் தமிழக முதல்வர் திரு. விஜயிடம் போஸ்டர் மூலம் கோரிக்கை வைத்தனர். வாகனத்தை நிறுத்தி அந்தக் கோரிக்கை போஸ்டரைப் பெற்றுக் கொண்ட அவர், குழந்தைக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார்.