ஜெயம் ரவியுடனான தொடர்பை நிறுத்தி கொள்கிறேன்- கெனிஷா அறிவிப்பு
கெனிஷா, ரவி மோகனுடனான தனது பிரிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சென்னை நகரத்தை விட்டு வெளியேறுகிறேன். இசை, சிகிச்சை (therapy), இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிடுகிறேன். ஆன்லைன் தொல்லை, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுகிறேன். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் தனக்கு தேவையான தனியுரிமையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து நான் அதிகமாக பேசிவிட்டேன், இதற்கு மேலும், தன்னை நல்லவளாக நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன். இனிமேல் அமைதியாக விலகிச் செல்கிறேன். ஒருவரை காப்பாற்றவும், ஆதரிக்கவும் முயன்றேன். ஆனால் மக்கள் ஏற்கனவே அவரைப் பற்றி ஒரு முடிவு செய்துவைத்து இருக்கிறீர்கள். இந்த உலகம் நல்லவர்களை விட பொய்யர்கள், சூழ்ச்சியாளர்கள், ஏமாற்றுபவர்களையே அதிகம் நம்புகிறது. அவரை இப்போது உலகத்திடம் விட்டுவிடுகிறேன். இனிமேல் எந்த விளக்கமும், பாதுகாப்பும், போராட்டமும் இருக்காது. உண்மையான அன்பு, விசுவாசம், மென்மை ஆகியவற்றை உலகம் மதிக்கவில்லை. நீங்கள் விரும்பியது நடந்துவிட்டது. கடைசியாக பெண்வாதம் ஜெயித்துவிட்டது. ஆனால் மகிழ்ச்சி தோற்றுவிட்டது.
ரவி மோகனை நான் சந்தித்தபோது, அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருந்த அவருக்கு, ஒரு தெரபிஸ்டாக என்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்கினேன்,அவ்வளவுதான். ரவி மோகன் ஒன்றும் குழந்தை கிடையாது தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் முதிர்ச்சி அவருக்கு உண்டு. இதில் ஏன் தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறீர்கள்? வயிற்றிலேயே ஒரு குழந்தையை இழந்த வலி எனக்குத் தெரியும். அப்படியிருக்கையில், இன்னொருவரின் குடும்பத்தை நான் ஏன் கெடுக்க நினைக்கப் போகிறேன்? நானும் ரவி மோகனும் உங்கள் கண்முன்னால்தான் இருக்கிறோம், நாங்கள் எங்கும் ஓடிப்போகவில்லை. சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஏராளம் உள்ளன தயவுசெய்து அவற்றைப் பற்றிப் பேசுங்கள். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நோண்டுவதை விட்டுவிட்டு, உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

