ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறேன் - அண்ணாமலை

 
TT

கள்ளகுறிச்சி விசாராய விவகாரத்தில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு தொடர சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தார்.

annamalai

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நான் யார் மீதும் இதுவரை அவதூறு வழக்கு தொடரவில்லை” “ஆனால் ஆர்.எஸ்.பாரதி எல்லை மீறி அவதூறு பேசி வருகிறார். கள்ளச்சாராய இறப்பில் எனது திட்டமிட்ட சதி இருப்பதாக பொய்யாக கூறியதால் இந்த வழக்கை பதிவு செய்துள்ளேன். ஆர்.எஸ்.பாரதி மீது நிச்சயம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வழக்கை நடத்துவேன்.  என் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறேன். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் டாஸ்மாக் சரக்கின் தரம் குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.

Annamalai

ஆர்.எஸ்.பாரதியிடமிருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குவேன் என்றார்.