டிக்கெட் விலை 100 ரூபாய் மட்டுமே... பார்த்திபன் அதிரடி முடிவு!!

 
parthiban

என் படத்திற்கு நானே வரிவிலக்கு அளிக்கிறேன் என்று இயக்குனர் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

parthiban

பிரபல திரைப்பட நடிகரும்,   இயக்குனருமான ஆர். பார்த்திபன் கடந்த ஆண்டு டீன்ஸ்  என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர்கள் யோகி பாபு மற்றும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.  பயோஸ்கோப் ட்ரீம்ஸ் அகிரா ப்ரோடெக்ஷன் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது. வருகிற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் டீன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை ஆனால் டீன்ஸ்  படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 100 ரூபாய் மட்டுமே. இதில் எனக்கு நட்டம் இல்லை வசதி குறைந்தவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே.. என்று தெரிவித்துள்ளார்.