'மாணவர்களை கெடுக்கும் புஷ்பா..' - பள்ளி தலைமை ஆசிரியை வேதனை

 
pushpa 2

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை பார்த்து பள்ளி குழந்தைகள் கெட்டுப்போயுள்ளனர் என ஹைதராபாத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பேசியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த படம் புஷ்பா 2. பெரிய வசூல் சாதனை செய்தாலும் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் பஞ்சமில்லை.


இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை பார்த்து பள்ளி குழந்தைகள் கெட்டுப்போயுள்ளனர் என கூறியுள்ளார். மோசமான ஹேர் ஸ்டைலோடு, ஆபாசமாக மாணவர்கள் பேசுகின்றனர். அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் இதுதான் நிலை. பெற்றோர்கள் கூட இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது நானே தோற்பது போல உள்ளது. அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை பார்த்து பள்ளி குழந்தைகள் கெட்டுப்போயுள்ளனர். இத்தகைய படத்திற்கு எந்த பொறுப்பும் இன்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.