மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்

 
murder

ராமநாதபுரம் அருகே மனைவியை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most famous murder cases that are too chilling for the world to forget -  iPleaders

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கடல் தொழில் செய்து வரும் இவரது மனைவி முத்துலட்சுமி. இருவருக்குமிடையே கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று இரவு மனைவி முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த போது கணவர் முருகன் கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரை இழந்த இவர்களது இரண்டு குழந்தைகளும் கண்ணீரில் தவித்து நிற்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கக்கின்றன. இது குறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.