கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கணவனும் தற்கொலை

 
ன்

கோவையில் மனைவியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவர்,கேரளா சென்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்த கணவன்


கேரளா மாநிலம் பாலக்காடு வண்டாழி ஈராட்டுக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (52). இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் கிருஷ்ணகுமார்  மற்றும் சங்கீதா இருவரும் கோவை பட்டிணம்புதூர் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் டிரேவல்ஸ் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். சங்கீதா கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சங்கீதாவிற்கு மருத்துவர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், அவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில்  கிருஷ்ணகுமார் மனைவியை பிரிந்து கடந்த 6 மாதங்களாக கேரளாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இருப்பினும் அடிக்கடி செல்போனில் சங்கீதாவிடம் இது குறித்து பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கேரளாவில் இருந்து காரில் புறப்பட்ட கிருஷ்ணகுமார், 6.30 மணியளவில் கோவை பட்டிணம்புதூர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் பள்ளி வாகனத்தில் சென்ற பின், மீண்டும் மருத்துவருடன் இருந்த பழக்கத்தை கைவிடும் படி கிருஷ்ணகுமார் சங்கீதாவிடம் அறிவுறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சங்கீதாவின் மார்பு பகுதியில் வைத்து சுட்டுள்ளார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து மீண்டும் காரில் கிளம்பிய கிருஷ்ணகுமார் கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கோவையில் இவர்கள் தங்கியிருந்த லட்சுமிநகர் குடியிருப்போர் நலச்சங்க வாட்ஸ் அப் குழுவில் சங்கீதா மருத்துவருடன் இருந்த தொடர்பை குறிப்பிட்டும், அதனால் வேறு வழியில்லாமல் துப்பாக்கியால் சுட்டதாகவும் பேசி பதிவிட்டுள்ளார். அதன் பின் கோவையில் திருமணம் முடித்து கொடுத்துள்ள தனது தங்கைகளுக்கு செல்போனில் அழைத்து தந்தைக்கு உடல் நல மிகவும் மோசமாக உள்ளதாகவும், உடனடியாக பாலக்காடு கிளம்பி வருமாறு கூறி, செல்போனை காரில் வைத்துவிட்டு தன்னை தானே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கிருஷ்ணகுமார் தற்கொலை செய்து கொண்டார். வாட்ஸ் அப் பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு நலசங்கத்தினர் சென்று பார்த்த போது தான் சங்கீதா ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தது தெரியவந்தது. 

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

இதையடுத்து அவர்கள்  உடனடியாக சூலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சூலூர் போலீஸார் கிருஷ்ணகுமாரை பிடிக்க கேரளா போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். அப்போது கேரளா போலீஸார் சென்று பார்த்த போது  கிருஷ்ணகுமார் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் சங்கீதாவிற்கு மருத்துவரிடம் இருந்த பழக்கம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார். மேலும் தான் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் மருத்துவருடனான நட்பை விட மனைவி தயாராக இல்லை என கூறியதாக மன உலைச்சலிலும் இருந்தது தெரியவந்தது. இதனால் கேரளா வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் அவரது அப்பாவின் லைசென்ஸ் உள்ள துப்பாக்கியின் 3 தோட்டக்களை எடுத்து கொண்டு கோவை வந்ததும், அதில் ஒரு தோட்டாவால் சங்கீதாவை சுட்டு கொலை செய்துள்ளார். ஒரு தோட்டாவால்  தற்கொலைச் செய்துள்ளார். மீதம் ஒரு தோட்ட காரில் கண்டறியப்பட்டது. மேலும் சங்கீதாவை சுட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி தோட்டாவில் 29 ரவைகள் இருந்துள்ளது. 

இது சங்கீதா உடலை துளைத்து பரவியதால் அதிகளவு இரத்த கசிவு ஏற்பட்டுள்ள உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் உடற்கூறு ஆய்வின் போது சங்கீதா உடலில் இருந்து 29 ரவைகள் எடுக்கப்பட்டது. மிகவும் அருகே இருந்து சுட்டத்தால் உடல் முழுவதும் உடனடியாக தோட்டாவின் ரவை பரவியதாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே சங்கீதாவுடன் பழகி வந்த மருத்துவரை போலீஸார் அழைத்து விசாரனை மேற்கொண்டனர். அப்போது அவர் நட்புடன் மட்டுமே பழகி வந்ததாகவும் கூறிச் சென்றுள்ளார். மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு பல முறை மருத்துவருடனான நட்பை கைவிட வலியுறுத்தி வந்த கணவன் மனைவியை துப்பாக்கி சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.