மனைவி செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததால் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

 
murder

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மனைவி செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதால் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியின் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானவரை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

murder

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு சொந்தமான குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி என கூறிக்கொண்டு அருண்பாண்டியன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர் குடியேறினர். இருவரும் அருகில் உள்ள தனியார் நூற்பாலைக்கு தினசரி கூலி வேலைக்கு சென்று வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கப் பக்கம் வசிப்பவர்கள் என்ன என்று கேட்ட பொழுது சித்ரா அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது அருண்பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. அதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே சித்ராவும், அருண்பாண்டியனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இது வழக்கமான சண்டை என அக்கப் பக்கம் இருப்பவர்கள் விட்டுவிட்டனர். இன்று மதியத்திற்கு பிறகு சித்ரா வீட்டை விட்டு வெளியே வராததால் ராஜ்குமார் திறந்திருந்த வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்பொழுது சித்ரா கழுத்து அறுக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த நேரத்தில் ராஜ்குமார் எப்படி போலீசுக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு கைரேகை நிபுணர்கள் வரவழைத்தும் ஆய்வு மேற்கொண்டனர். கணவன், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கணவன் அருண்பாண்டியன் சித்ராவை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனை யடுத்து தலை மறைவான அருண்பாண்டியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.