மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

 
murder

விருதுநகரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(32.) இவர் திருமங்கலம் கனரா வங்கியில் கிளார்க் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த தம்பதிக்கு நிகர்ஷித் (10),கரிஷ் கண்ணன் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இன்று காலை தனது மனைவி கற்பகத்தை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்த கண்ணன், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று தகவல் சொல்லி உள்ளார்.உடனடியாக போலீசார் விரைந்துவந்து, கண்ணன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.