கிளாம்பாக்கத்தில் கைகலப்பு! மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய கணவன்

 
ச் ச்

கிளாம்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக புகார் அளிக்க வந்த கணவன் - மனைவி இருவரும் காவல் நிலையம் முன்பே தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், இது குறித்து புகார் அளிப்பதற்காக இருவரும் கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, காவல் நிலையத்தின் வாசலிலேயே இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் பொது இடமென்றும் பாராமல் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த மோதலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் தலையிட்டு, சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று, சமரசம் பேசி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அங்கே வீடியோ பதிவு செய்த நிருபர்களையும் எதற்காக வீடியோ எடுக்க  வீடியோ எடுக்காதீங்க இது குடும்பப் பிரச்சனை என போலீசார் விரட்டும் தோனியில் பேசினார்கள். புகார் அளிக்க வந்த மனைவியை கணவன் ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து புகாரின் பெரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.