கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

 
death

கண்டாச்சிபுரத்தில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(67). இவர் கண்டாச்சிபுரம் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாஞ்சாலை (64). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சேகர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு துணையாக பாஞ்சாலை உடன் இருந்து கவனித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மருத்துவமனையில் பாஞ்சாலை தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனால் அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று காலை 7 மணி அளவில் இறந்து போனார். இதையடுத்து சேகரின் உடலை அடக்கும் செய்வதற்காக அவரது மகன்கள் கண்டாச்சிபுரத்திற்கு எடுத்து வந்தனர்.இதற்கிடையே சேகர் இறந்த செய்தியை அவருடைய மனைவி பாஞ்சாலியிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அவர் உறைந்த நிலையில், அடுத்த நிமிடமே பாஞ்சாலையும்  உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் கண்டாச்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.