வரதட்சணை தராததால் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்- மனைவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே திருமணத்தின்போது பேசப்பட்ட நகையை போடாததால் மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டிய கணவரால் மனம் உடைந்த பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா வயது( 30 ). இவர் தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த புதுவை பொதுப்பணித்துறை ஊழியரான கார்த்திகேயன் (37), இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுப்பதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில் திருமணத்தின் போது அதனை ஐந்து பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து மீதமுள்ள ஐந்து பவுன் நகையை நிலம் விற்று தருவதாக கூறியுள்ளனர். மேலும் இரண்டரை மாதம் ஆகியும் இவர்களால் நகையைபோட முடிவில்லை. எனவே இரு வீட்டாருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்த்திகேயன் மனைவிக்கு தெரியாமல் பிரியங்காவை ஆபாசமாக புகைப்படம் வைத்துக்கொண்டு 5 சவரன் நகையை உடனடியாக தராவிட்டால் உனது ஆபாச புகைப்படத்தை பிரியங்கா பணியாற்றும் பள்ளிக்கும் மற்றும் இணையத்திலும் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து மனமுடைந்த பிரியங்கா கடந்த 20 ஆம் தேதி மாலை தாய் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். உடனே அலறல் சத்தம் கேட்டு தாயார் மற்றும் உறவினர்கள் பிரியங்காவை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிரியங்காவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து பிரியங்காவின் தந்தை நாரயணமூர்த்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மகளின் இறப்புக்கு காரணமான கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கணவர் கார்த்திக்கேயன் மற்றும் மாமியார் கற்பகவள்ளி மீது சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என இறந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.. இதனை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து உடலை நேற்று மாலை வாங்கிக்கொண்டனர்.
இந்நிலையில் கணவர் கார்த்திகேயனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் இறந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் கூறப்பட்ட ஆபாச படம் எடுத்து மிரட்டி தாக கூறப்பட்டது உண்மை இல்லை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி சுமார் இரண்டரை மாதத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வார்.


