குடும்பத்தையே அழித்த சூதாட்டம்... மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தலைமறைவான கணவன்!

 
murder

நாமக்கல்லில் ஆன்லை சூதாட்டத்தில் ரூ.50 லட்சத்தை இழந்ததால் மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடிவருகின்றனர். 

murder


நாமக்கல் மாவட்டம் பெரியமணிலியை சேர்ந்தவர் பிரேம் ராஜ் (40) நாமக்கல் லில் உள்ள எச்.டி.எப்‌.சி வங்கியில் வீட்டு கடன் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியை ராஜினாமா செய்துள்ளார். சேலம் சாலையில் பதி நகரில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் மனைவி மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி(6), மகன் பிரனிஷ்(1.1/2) ஆகிய 3 பேருடன் வசித்து வந்தார்.

இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் வசிப்பவர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து இருந்துள்ளது. சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது தூங்கும் அறையின் கீழே மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி(6), மகன் பிரனிஷ்(1.1/2) ஆகிய 3 பேரும் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசார் க்கு தகவல் தெரிவித்தனர். சம்ப இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் நகர போலீசார் மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பிரேம் ராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சத்தை இழந்துள்ளதும் இதனால் மனமுடைந்த அவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தப்பி ஓடி உள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்த டைரியை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய பிரேம் ராஜ் யை தீவிரமாக தேடி வருகின்றனர்..