#BREAKING பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு

 
ச்

வேடசந்தூர் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலம் கிடந்ததாக புகார்.எழுந்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் அருகே உள்ள அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது. பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் மலக் கழிவுகள் கிடந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளதாக தொட்டியின் சுவற்றில் எச்சரிக்கை துண்டுச் சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் சிலர் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்துவிட்டு, எச்சரிக்கை கடிதத்தையும் வைத்து சென்றுள்ளனர். பள்ளி நிா்வாகத்தின் புகாரை அடுத்து வடமதுரை போலீசாா் சம்பவம் குறித்து நோில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை செய்தார். மாணவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிபிடதக்கது.