கள்ளச்சாராய பலி- அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 
Human rights

கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

mks

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து  21 பேர்  உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் இரண்டு நாளாக போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும், 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உயிரிழப்பு குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவு  தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளது. மேலும் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.