பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ராஜேஷ்தாஸ்க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 

பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ராஜேஷ்தாஸ்க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பாதுகாப்புக்காக சென்னையிலிருந்து சென்ற தமிழக அரசின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்றிருந்தார். அப்போது அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர். காரில் சென்றபோது பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் ராஜேஷ்தாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்ட ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் எழுந்ததால் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளப்பட்டார்.

பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ராஜேஷ்தாஸ்க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

பாலியல் தொல்லை தந்த டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்.பி. தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகையில் வெளிவந்த செய்தியை ஆதாரமாக வைத்து இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம் உள்துறை செயலர், டிஜிபி பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மாநில மனித உரிமை ஆணையம், ராஜேஷ்தாஸுக்கு அபராதமும் விதித்துள்ளது.