நல்லக்கண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை

 
ச்

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணு உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Image

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு (101) நேற்று காலமானார். அவரது உடன் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்திய பின்னர், இன்று அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நல்லக்கண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.